முத்திரை

யோகத்தின் ஓர் அங்கம் முத்திரை ஆகும். உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் எளிதில் இப்பயிற்சியினை மேற்கொண்டு பலன் பெறலாம். இதற்கு திருமந்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.

"நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே
             திருமந்திரம் - (750)



சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்களைச் சேர்த்து சிரநடு சிற்றம்பலத்தில் பொருத்துவதற்கான ஒரு சாதனம் இம்முத்திரை ஆகும். சந்திசாலனம் என்று இம்முத்திரையைக் கூறுவர். சுரபி முத்திரை என்றும் இம்முத்திரையைக் கூறுவர். இதனுடைய பலனையும் முத்திரையைச் செய்யும் முறைகளையும் வீடியோவில் பார்க்கலாம்.

வருத்த மிரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் கட்டிப் பிடித்து
நெறித்து ஒன்றவைத்து நெடிது நடுவே
பெருத்தவிரல் இரண்டுள் புக்குப் பேசே
             திருமந்திரம் (1094 )

இம்முத்திரையை யோனி முத்திரை எனக் கூறுவர். இம்முத்திரையின் பலன், உடல், மனம், உணர்வு ரீதியாக செயல்பட வல்லது. முத்திரைகள் பயிற்சி செய்வதற்கு எளிமையானது. இதனைப் பயில்பவர்கள் பெறும் பேறு மகத்தானது. இதன் வீடியோ, ஆடியோக்களை அன்னையின் வலைத்தளத்திலிருந்து பார்த்துப் பயன்பெறலாம்.

முத்திரை

கட்டைவிரல் அக்னி, ஆள்காட்டி விரல் வாயு, நடுவிரல் ஆகாயம், மோதிரவிரல் நிலம், சுண்டுவிரல் நீர் என ஐந்து விரல்களில் பஞ்ச பூத ஆற்றல் உள்ளன. உடலில் இந்த பஞ்ச பூத சக்திகளை சமநிலைப்படுத்துவதற்கான பயிற்சி முத்திரை பயிற்சியாகும். இவைகள் சமநிலையில் இருந்தால் நோயற்ற வாழ்வில் வாழலாம்.

1. ஞான முத்திரை

செய்முறை


பலன்கள் :

பிராண முத்திரை

செய்முறை


பலன்கள் :

உடல் வலுவாகும். இரத்த குழாய் அடைப்புகள் சரியாகும். உற்சாகம் உண்டாகும். நோய் எதிப்பு சக்தி அதிகமாகும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். களைப்பு நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். பக்க வாத நோய்கள் குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். சுவாச உறுப்புகள் உறுதியாகும். ஆஸ்துமா குணமாகும்.

சுமண முத்திரை

செய்முறை

மார்புக்கு முன்பாக இருகைகளின் புறப்பகுதிகளை ஒன்றோடோன்று தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல் ஆள்காட்டி விரலுடன் சேர்த்து வைக்கவும். மற்ற நான்கு விரல்கள் ஒன்றோடோன்று தொடவேண்டும். மூன்று வேளைகள் 15 நிமிடம் என 45 நாட்கள் செய்யவும்




பலன்கள் :

சர்க்கரை நோயால் நரம்புகள், கல்லீரல், கணையம், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் பாதிப்படையும். சுமண முத்திரை, சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்க உதவும். மன அமைதி ஏற்படும். புத்துணர்வு ஏற்படும்.

பிரிதிவி முத்திரை

செய்முறை :

மோதிர விரலை மடித்து பெருவிரல் நுனியுடன் சேர்த்து வைத்தால் அது பிரிதிவி முத்திரை.



பலன்கள் :

உடல் சோர்வு, மனச்சோர்வு நீங்கும். பலகீனமானவர்கள் உடல் எடை அதிகரிக்க செய்யலாம். தோலின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். உடல் செயல்திறன் அதிகரித்து ஆரோக்கியம் கூடும். உலக வாழ்க்கை குறித்து தெளிவான சிந்தனை உருவாகும். அலைபாயும் மனம் அமைதியுறும். உலகியல் பற்று குறையும். சைனஸ் நோய்கள் அகலும். உணவு எளிதில் ஜீரணமாகும். பொறுமை, தன்னம்பிக்கை ஏற்படும். மூட்டுவாதம் குணமாகும். கழுத்து முதுகெலும்பு அழற்சி, முகநரம்பு இழுப்பு குணமாகும். வாயுத்தொல்லை நீங்கும்.

ஆகாய முத்திரை

செய்முறை :

நடுவிரல், கட்டைவிரலின் தலைப் (நுனி) பகுதியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக வைக்கவும்



பலன்கள் :

காதின் அடைப்புகள் நீங்கும். கேட்கும் சக்தி அதிகரிக்கும். காது, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். மன அமைதி, தெளிவு உண்டாகும். எலும்புகள் வலுப்பெறும்.

வாயு முத்திரை

செய்முறை :

சுட்டு விரல் எனும் ஆள்காட்டி விரலை மடக்கி அதன்மேல் பெருவிரலை வைத்து அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நேராக வைக்கவும். இம் முத்திரையை முதலில் 15 நிமிடத்தில் தொடங்கி 45 நிமிடம் வரை செய்யலாம்.



பலன்கள் :

வாயுமுத்திரை செய்யும்போது, நம் உடலில் உள்ள சுழுமுனை நாடியில் பிராண சக்தி பாய தொடங்கும். மனஅமைதி, சுறுசுறுப்பு கிட்டும். பக்கவாதம் குணமாகும். உடல் வலிகள் நீங்கும். முதுகுத் தண்டுவட வலிகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். அஜீரணம், வாயுத் தொல்லை, பசியின்மை அகலும். படபடப்பு நீங்கும். முகத்தில் உண்டாகும் வாத நோய் குணமாகும். மன இறுக்கம் நீங்கும். தொண்டையில் ஏற்படும் அடைப்புகள் நீங்கும்.

வருண முத்திரை

செய்முறை :

சுண்டுவிரல் நுனியைக் கட்டை விரல் நுனியுடன் சேர்த்து, ஒன்றையொன்று அழுத்துமாறு வைக்கவும். மற்ற மூன்று விரல்களும் வளையாமல் நேராக விரல்களிடையே இடைவெளி இல்லாமல் வைக்கவும்.
தினமும் அரைமணி நேரம் மனம் ஒருமுகப்பட்டு பயிற்சி செய்யவும்.



பலன்கள் :

சிறுநீரகக் கோளாறுகள் அகலும். நீரிழிவு நோய் குணமாகும். உடலின் வெப்பம் சீராக இருக்கும். தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகும். தாகம் குறையும். சதைப்பிடிப்பு நீங்கும். குடல் அழற்சி நோய் குணமாகும்.

சூரிய முத்திரை

செய்முறை :

முதலில் மோதிரவிரலைப் பெருவிரலின் கீழ்ப் பகுதியில் வைத்து, பெருவிரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இம்முத்திரையை 15 நிமிடத்தில் ஆரம்பித்து 20 நிமிடம் வரை செய்யலாம்.



பலன்கள் :

தொப்பை குறையும். கொழுப்பு குறையும். உடலின் வெப்பம் அதிகரிக்கும். மனஅமைதி ஏற்படும். உடல் பருமன் குறையும். தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும். ஜீரணக் கோளாறுகள் அகலும். உயிரின் சக்தி பெருகும். இரத்தகுழாய் அடைப்பு நீங்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கண்பார்வை திறன் அதிகரிக்கும். களைப்பு நீங்கும்.

கதை முத்திரை

செய்முறை :

கட்டைவிரல் நீங்கலாக மற்ற நான்கு விரல்களை மடித்து உள்ளங்கையை தொடவேண்டும். இரு கட்டைவிரல்களும், ஆள்காட்டி விரல்களை தொடவேண்டும். நடுவிரல்களை நேராக உயர்த்தி விரலின் நுனிகள் ஒன்றையொன்று தொடவேண்டும்.


பலன்கள் :

எதிரிகள் விலகுவர். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனம் அமைதியாகும். மூளை நன்கு செயல்படும். உடல் வெப்பநிலை சீராகும். சக்தி அதிகரிக்கும். தைரியம் விடாமுயற்சி உண்டாகும்.

திரிசூல முத்திரை

செய்முறை :

முதலில் சுண்டுவிரலை மடக்கி அதன்மீது கட்டைவிரலை வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவை நேராக இருக்க வேண்டும் ஒன்றைஒன்று தொடாமல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சூலத்தை போல் நேராக நிற்க செய்யவும்.


பலன்கள் :

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பகைவர்கள் விலகுவர். மனத்தெளிவு உண்டாகும். தடைகள் விலகும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும். உடலின் எல்லா பாகங்களும் முறையாக இயங்கும். தேஜஸ் கைகூடும். சூட்சுமமான பொருள்களை உணரும் ஆற்றல் கிட்டும்.

விக்ன முத்திரை

செய்முறை :

முதலில் விநாயகரை தொழுது பின் தொடங்கவும். முதலில் கையை மடக்கவும். பின் மோதிர விரலின் மேல் கட்டைவிரலை லேசாக பதிய வைக்கவும். நடுவிரல் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். நடுவிரல் பூமியை பார்த்தபடி தலைகீழாக நிமிர்த்தியபடி வைக்கவும்.


பலன்கள் :

புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உடல் உபாதைகள் நீங்கும். பூமி சம்மந்தப்பட்ட காரியங்கள் வெற்றி அடையும். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற செயல்கள் வெற்றி பெறும். மனம் ஒருமைப்படும். தியானத்தால் உடல் உறுப்புகள் முறையாக இயங்கும். வியாதிகளின் சிரமங்கள் குறையும்.

பாச முத்திரை

செய்முறை :

இரு கைகளின் விரல்களை முதலில் மடக்கவும். ஆள்காட்டி விரல்களை மட்டும் வளைத்து ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். பின் இரு கட்டைவிரல்களையும் ஆள்காட்டி விரலுடன் நிமிர்ந்த நிலையில் இணைக்கவும். மணிக்கட்டுக்கு மேல் உள்ள கைகளின் கீழ்பகுதிகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் மடக்கியபடி இருந்தால் போதும். இந்த மூன்று விரல்களும், வலது கை, இடதுகை, விரல்கள் இணையாமல் இடைவெளியுடன் இருக்க வேண்டும். இம்முத்திரையை நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.


பலன்கள் :

உடலிலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இறைசிந்தனை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து உயர்வான எண்ணங்கள் உருவாகும். பற்று பாசம் குறையும்.

அங்குச முத்திரை

செய்முறை :

முதலில் முஷ்டியை மடக்கி நடுவிரல் நிமிர்ந்து வளையாமல் நேராக நிற்கவேண்டும். கட்டைவிரல், மோதிரவிரலின் மேல் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரலை முதலில் நிமிர்த்தி அதன் பக்கவாட்டுப் பகுதி நடுவிரலின் நடுக்கோடு இருக்கும் இடத்தில் பக்கவாட்டில் தொட்டுக்கொண்டு இருக்குமாறு வைக்கவும். இப்போது ஆள்காட்டி விரலின் மேல் பகுதியை மட்டும் சிறிது வளைக்கவும். அங்குசம் போல் வளைந்த கைகள் நெஞ்சுக்கு அருகில் இருக்க வேண்டும் இதுவே அங்குச முத்திரை.


பலன்கள் :

நமது லட்சியம் நிறைவேறும். விநாயகர் அருளால் தடைகள் நீங்கும். ஆணவம் (ego) அகலும். கடன் தொல்லை நீங்கும். நோய்கள் அகலும். ஆசைகள் அகலும். ஆன்மிகச் சக்தி அதிகரிக்கும். அடக்கம் உண்டாகும். பகை விலகும். மனம் தூய்மை, தெளிவு பெறும். தேஜஸ் உண்டாகும்.

மான் முத்திரை

செய்முறை :

நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும்.



பலன்கள் :

மன அமைதி உண்டாகும். புனிதத்தன்மை உண்டாகும். செயலில் உண்மை, நேர்மை இருக்கும். மனஒருமைப்பாடு கிட்டும். தலைவலி, தலைபாரம் குறையும். பல்வலி நீங்கும். உடலின் நச்சுப் பொருட்கள் வெளியேறும். கோபம் நீங்கும். பொறுமை உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ப்ராங்கியல் முத்திரை

செய்முறை :

இம்முத்திரை செய்வதற்கு சிறு விரலைக் கட்டைவிரலின் அடியிலும், மோதிரவிரலைக் கட்டைவிரலின் முதல்க்கோட்டிலும், நடுவிரலைக் கட்டைவிரலின் நுனியிலும் இருக்குமாறு வைக்க வேண்டும்.


பலன்கள் :

1. மூச்சித்தினறல் குறைகிறது.
2. மார்புச் சளி குறைகிறது.
3. மனத்தெளிவு உண்டாகிறது.
4. மன உணர்ச்சிகள் கட்டுப்படுகிறது.
5. ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்கள் குணமாகின்றன.

ஆஸ்துமா முத்திரை

செய்முறை :

இருகைகளின் நடுவிரல்களை மடித்து, நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற விரல்களை நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஆஸ்துமா முத்திரை.



பலன்கள் :

சுரபி முத்திரை

செய்முறை :

ஒவ்வொரு கையின் ஆள்காட்டி விரலின் நுனியை மற்றொரு கையின் நடுவிரலுடனும், ஒவ்வொரு கையின் மோதிரவிரல் நுனியை மற்றொரு கையின் சிறுவிரலுடனும் வைத்து, இருகட்டை விரலையும் ஒன்றையொன்று தொடுமாறு ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே சுரபி முத்திரை ஆகும். கட்டைவிரல் எந்த விரலையும் தொடக்கூடாது.


பலன்கள் :

சுஜி முத்திரை

செய்முறை :

இரண்டு கைகளையும் இறுக மடக்கவும். நான்கு விரல்களும் இறுக்கமாக மடக்கியிருக்க, பெருவிரல் நடுவிரல் மேல் இறுக்கமாக நெஞ்சிக்கு அருகில் வைக்கவும். மூச்சை மெதுவாக இழுத்து விட்டு இரு கைகளைலும் சுட்டு விரலை மேல் நோக்கி வைக்கவும்.


பலன்கள் :

மலச்சிக்கல் நீங்கும். ஒற்றைத் தலைவலி, சைனஸ், மூல நோய், ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும்.

தூய்மைப்படுத்தும் முத்திரை

செய்முறை :

பெருவிரலால் மோதிர விரலின் கீழ்ப் பகுதியை மெதுவாக தொடவும். மெல்லிய அழுத்தம் கொடுக்கவேண்டும். தினமும் 15 நிமிடங்கள் செய்யவும்.


பலன்கள் :

உடலில் உள்ள நச்சுப் பொருட்களும், கழிவு பொருட்களும் வெளியேறி உடல் தூய்மையாகின்றது. நோய்கள் அகலும். உடல் புத்துணர்ச்சி பெறும். இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

முகுள முத்திரை

செய்முறை :

நான்கு விரல்களையும் பெருவிரலோடு இணைத்து விரல்கள் வான் நோக்கி வைக்கவும்.



பலன்கள் :

உடலில் எந்த பாகத்தில் வலி உள்ளதோ, அந்த இடத்தில் முகுள முத்திரை செய்தபடி விரல்களை வைக்கவும். முழுக் கவனமும் அந்த இடத்தில் வைக்க, வலி சிறிது சிறிதாக குறையும். ஏதேனும் உறுப்பு நோய்வாய்ப்படின் அந்த உறுப்பின் மேல் இம்முத்திரையை செய்தபடி சக்தியை உறுப்பிற்குள் செலுத்தினால் அவ்வுறுப்பு உறுதியடைந்து நோய் தாக்கம் குறையும்.

அபானவாயு முத்திரை

செய்முறை :

சுட்டு விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தை தொடவும். நடுவிரல், மோதிர விரல்களை மடித்து பெருவிரலின் நுனிப் பகுதியை தொடவும். சுண்டுவிரல் நேராக வைக்கவும்.


பலன்கள் :

இதயம் பலப்படும். இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் குறையும்.

மகா சிரசு முத்திரை

செய்முறை :

பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் மூன்றின் நுனிகளும் ஒன்றையொன்று அதிக அழுத்தம் இல்லாமல் தொடவும். மோதிரவிரலை மடித்து உள்ளங்கையின் நடுவில் உள்ள பள்ளத்தை தொடவும். சிறுவிரல் நேராக வைக்கவும்.


பலன்கள் :

தலைவலி, தலை பாரம் குறையும். கண்கள் மற்றும் கண்களை சுற்றியுள்ள வலிகள் நீங்கும். சைனஸ் நோய் குறையும். கழுத்து பகுதியில் உள்ள வலிகள் குறையும். மனஅமைதி கிட்டும்.

ருத்ர முத்திரை

செய்முறை :

பெருவிரல், சுட்டுவிரல், மோதிரவிரல் மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளை ஒன்றாக இணைக்கவும். நடுவிரலும் சுண்டுவிரலும் நேராக வைக்கவும். சுவாசம் சீராக விடவும்.



பலன்கள் :

உடலின் உறுப்புக்களான வயிறு, மண்ணீரல், கணையம் தூண்டப்பட்டு உயிர்ச்சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள அசதி, மயக்கம், தலைசுற்றல் மறையும். செரிமான சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். குடல் இறக்கம், மூலநோய் , கருப்பை கீழிறக்கம் ஆகியவை கட்டுப்படும். இதய நோயின் தீவிரம் குறையும்.

கருட முத்திரை

செய்முறை :

இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம். இரண்டு கைகளின் கட்டை விரலையும் எதிர்ப்புறமாகக் கோர்த்து மற்ற விரல்கள் நீட்டிய படி வைக்கவும்.


பலன்கள் :

கருட முத்திரையும் மனதில் உள்ள தீய குணங்களைப் போக்கி, உடலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரும். மாதவிடாய் காலத்தில் வரும் வலிகள், வயிற்று உபாதைகள், சுவாசக் கோளாறு போன்றவற்றை நீக்கும். பிறப்புறுப்புகள் வலிமையுடன் செயல்படச் செய்கிறது. கூர்மையான கண் பார்வை, மனஅமைதி போன்றவற்றிற்கு ஏற்ற முத்திரை இது. உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும். இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும்

சபான முத்திரை

செய்முறை :

இரண்டு கைகளில் உள்ள ஆட்காட்டி விரல்களை மேல் நோக்கிபடி இணைக்க வேண்டும் .மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளபடி இணைந்திருக்க வேண்டும் .கட்டை விரல்கள் இரண்டும் பெருக்கல் குறிபோல சாய்ந்த நிலையில் ஒன்றின் மீது ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் .



பலன்கள் :

சுவாசம் சீராகும்,எதிர் விளைவு சக்தி வெளியேறி ,புதிய சக்தி கிடைக்கும் ,எல்லாவிதமான மன அழுத்தமும் நீக்கும் ,உடலில் இருந்து நச்சுப் பொருள்கள் வெளியேறும்