அற்புதமான அதிசய அனுபவம்

இறைவன் யோகநிலையினைக் கொண்டு உணர்த்தியதை நினைக்கும்தோறும் ஊற்று மணல் கேணிபோல் உள்ளம் உருகும். வாசிநிலையினைச் சரிசெய்து மூலாதாரத்து மூண்டு எழுகனலைக் காட்டிக் கொடுத்த அருள்நிலையினை நினைப்பேன்.

குண்டலினி ஆற்றல் என்னுள் எழுந்து மாறி நின்று மயக்கும் புலன்களை மடைமாற்றம் செய்த அருள் செயலினை நினைத்துக் கொள்வேன். இறைவனே என்னை ஆரத்தழுவி குழந்தை உன்னைப் பிரிந்து நானும் வருந்துகின்றேன் என்ற வாசகம் நினைவிற்கு வரும்போது அவ்வார்த்தை இன்றளவும் என்னை உய்விக்கச் செய்யும் வார்த்தையாக எண்ணுவேன்.

ஞான நாடகம் ஆடுவித்தவா!

இறைப்பித்து மேலிட்ட ஆன்மாää தன் தலைவனுக்காக வேண்டும்தனையும் வாய்விட்டு அலறிää அன்பு நிறை விரைஆர் மலர் தூவிப் பூண்டு கிடக்கும் அருள் அனுபவப் பிழிவு திருவாசகம். இந்த அருள் அனுபவம் காலää தேசää வர்த்தமானங்களைக் கடந்து நிற்க வல்லது. ஊழிக்காலத்திற்கு தனக்கு உற்ற நண்பனாக இருக்கவல்லது என்று இறைவனே படி எழுதிக்கொண்டது. அனைத்து ஆன்மாக்களும் விழிப்புறுவதற்காக வாதவூரடிகள் மீண்டும் பாடவேண்டும் என இறைவன் வேண்;டி படி எடுத்துக்கொண்ட நூல் திருவாசகம்.

ஞானப்பயிர்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாக நிற்கும் திறம்பேசும் நிறைவுக் கட்டுரை நாம் சக மனிதர்கள்பால் காட்டும் போலி அன்பை நையாண்டி செய்கின்றது. வந்தியம்மையின் பேரன்பை ஆசிரியர் சரியான இடத்தில் இணைத்து அன்பின் ஆற்றல் பேசுகிறார்.

முதல் மூன்று ஆழ்வார்களை முன்னிறுத்திää பூதத்தாழ்வாரின் அன்பே தகளியாய் எனும் தொடங்கும் பாசுரத்தை அதன் பின்புலத்துடன் இனம் காட்டுகிறார் அம்மையார். அன்பு கொண்டு பைந்தமிழ் பின் சென்றான் பச்சைப் பசுங்கொண்டலாகிய நாரணன் என்பதை எடுத்துக்காட்டி அன்பின் அகலம் விரிக்கிறார்.

புக்கு நிற்பதும் புகுந்து நிற்பதும்

கல்வியிலும் மேலாக ஒழுக்கத்தையும் செல்வத்திலும் மேலாகச் சிந்தை நிறைவையும் போற்றி நின்ற பாரத மண்ணில் அறநெறிப் பண்புகள் தாழ்வுற்று ஆன்மீகத் தடம் வறுமையில் தங்க மானுடம் பாழ்பட்டு நிற்கும் தருணம் இது. காத்தாளும் பொறுப்புடையவர்கள் காவல் இழந்து நிற்கின்றனர். அறங்களை போதிக்கும் பொறுப்புடைய ஞான நிலையங்கள் நிறுவப்பட்டுக் காசு பணங்களைக் கணக்குப் பார்த்து வருகின்றன. மனிதநேயமற்ற கல்வியும்ää அறநெறி சாராது ஈட்டப்படும் செல்வமும் போலிப் பெருமிதத்தோடு உலாவரும் காலம் இது. இத்தருணத்தில் நள்ளிருளில் ஏற்றிவைக்கப் பெற்ற ஞான விளக்காக அன்னை சகுந்தலா அவர்கள் புக்கு நிற்பதும் புகுந்து நிற்பதும் என்ற தலைப்பில் அரியää ஆன்மீகää அறநெறி நூல் ஒன்றைத் தமிழ் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

திருவாசகம் காட்டும் யோகவிளக்கம்

மனித உடல் எடுத்த உயிர் வளா்ச்சியுறும்போது பல பருவங்களைக் கடந்து வருகின்றது. தாலப்பருவம், காப்புப் பருவம், அம்புலிப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளா்நடைப் பருவம், பால பருவம், இளமைப் பருவம், பேரிளம் பருவம், விருத்தப் பருவம் என வளா்ச்சி மாறி மாறி வருகின்றது. பின்னா் மரணம் வருகின்றது. உடம்பைப் புதைத்தால் மண்ணுடன் மக்கி மண்ணாகிவிடுகின்றது. நெருப்பில் இட்டால் சாம்பலாகிவிடுகின்றது. எந்தவொரு பொருளும் மற்றொரு பொருளாக மாறிகிறதே தவிர, ஒரு பொருள் இல்லாமல் போகவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறுகின்றது.

Energy can neither be created
Nor be destroyed but it can be
Changed in to one from to another
        (நியுட்டன் விதி)
இந்த விதியை நிலைநாட்ட எத்தனை சோதனைச் சாலையில், எத்தனை முயற்சியை செய்திருப்பார் நியுட்டன்? எவ்வளவு எளிதாக இறைவனே வந்து மாணிக்கவாசகருக்கு அறிவுறுத்துகிறார்?

மாணிக்கவாசகா் “மாற்றமாம் வையகம்“ என்ற விஞ்ஞான உண்மையை தனது அனுபவத்தில் உணா்ந்து, நமக்கும் உணா்த்துகின்றார்.