அன்னை சகுந்தலா

அன்னை சகுந்தலா அம்மையார் அவர்கள் 1952- ஆம் ஆண்டில் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சிவத்திரு. ஹரிஹரன், சிவத்திரு. செல்லம்மாள் ஹரிஹரன் இவர்கட்கு மூன்றாவது மகவாக அவதரித்தார். அன்னையின் பட்டப்படிப்பு குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வேதியியல் பிரிவில் 1972 ல் நிறைவுற்றது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் ஜீவகாருண்ய தொண்டாக செய்து வருகின்றார்.


கருவுற்ற நாள் முதலே தனது வழி, துறை இவற்றை இறைவனே குருவாக உள்நின்று உணர்த்த உணர்ந்தவர் அன்னை அவர்கள். ஒருநாள் அன்னையும், அவரது தந்தையும் காஞ்சி ஸ்ரீ பரமார்த்த சுவாமிகளிடம் ஆசி பெறுவதற்கு கலவை என்ற ஊருக்கு சென்றனர். அப்போது காஞ்சி பெரியவர் அன்னையை “ஓதாது உணர்ந்திட ஒளி வரப்பெற்றவள்” என்று ஆசி வழங்கியதோடு, அவளுக்கு பரமேஸ்வரனே குருவாகவும், தெய்வமாகவும் நின்று வழிகாட்டுவார். மேலும் அன்னையின் விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என அருளாசி வழங்கினார். அன்னையின் மனதை மையமாய் கொண்டு எழுந்த இறைவனின் எண்ண அலைகளுக்கு மதிப்புத் தந்து செயல்பட்டமையே அவரின் மாண்பிற்கும், மாட்சிக்கும், புனிதத் தன்மைக்கும் காரணமாகும்.

"எதனையும் இழப்பதல்ல ஆன்மிகம். எல்லாவற்றையும் உள்வாங்கும் நிறையனுபவமே ஆன்மிகம்” – என்ற கூற்றுக்கிணங்க தன்னுடைய தேகம் துற்றவை துறந்த வெற்றுயிராக இல்லாமல், ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் பேரண்ட ஆற்றலை வாயெல்லாம் தித்திக்க, மனமெல்லாம் தித்திக்க, மன்னிய மெய் அறிவெலாம் தித்திக்க, ஊனெலாம் தித்திக்க, உணர்வெலாம் தித்திக்க ஒரு நிறையனுபவமாகவே தனது தவ வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார் அன்னை.

அன்னையின் இந்த இறைஞான நாட்டத்திற்கும், சிவயோக தவப்பயணத்திற்கும் பெரிதும் துணைநின்றவர்கள் மூவர். ஒருவர் திருவாசகம் என்னும் ஞானக்கனலை இந்த உலகுக்கு படைத்த, மாணிக்கவாசகப் பெருமான். மற்றவர் தாயுமானவசுவாமிகள் மூன்றாமவர் இந்த இருவராலும் செதுக்கப்பெற்று ஒளிவடிவமாகி என்றும் நிலைத்திருக்கும் நிலையை அடைந்த வடலூர் வள்ளல் பெருமானார். மேலும் இவ்வுலகுக்கு அருட்தொண்டாற்றிய இராமகிரு~;ண பரமஹம்சர், விவேகானந்தர், ~Pரடி சாய்பாபா போன்ற இறை அடியவர்கள் தங்களாகவே முன்வந்து அன்னையை ஆட்கொண்டதோடு அன்னையின் தவப்பயணத்தில் வழித்துணையாகவும், தோன்றும் துணையாகவும், தோன்றாத் துணையாகவும நின்று வருகின்றனர்.

குழந்தைப் பருவம் முதலே பக்தி இலக்கிய நூல்களின் மீது அதிக ஆர்வம் காட்டிய அன்னை அவர்கள், இறைவனே உள்நின்று உணர்த்த திருவாசகம், திருவருட்பா, தாயுமானவசுவாமிகள் பாடல்கள், திருமந்திரம், தேவாரம், கந்தர் அலங்காரம் போன்ற நூல்கள் உணர்த்தும் யோக நிலையங்களை தான் உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், இவ்வுலகில் கடைகோடியில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவுக்கும் சென்றடைய அனுதினமும் உழைத்து வருகின்றார்.

பாமர மக்களுக்கும் இறையனுபவம் மற்றும் இறையுணர்வு சென்றடைய தனது ஆன்ம யாத்திரையை ஒரு நூலாக தர விழைந்தார். இந்த நூலை வருவிப்பதற்கு மூலதனமாக இருந்தது லாஹிரி மகாசயரின் நாட்குறிப்பும், பரமஹம்ச யோகானந்தரின் “ஒர் யோகியின் சுயசரிதை” என்ற புத்தகங்களே துணை நின்றன. இதன் விளைவாக இவ்வுலகுக்கு கிடைத்த அருள் அனுபவப் படையல் “அற்புதமான அதிசய அனுபவங்களும்” என்கின்ற புத்தகம். மேலும் அன்னையின் கரங்களினால் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொக்கி~ங்களாக இவ்வுலகுக்கு கிடைத்துள்ளன.

ஆசாபாசங்கள் நிறைந்த இவ்வுலகில் அவர் எழுதிய ஆன்மிக நூல்களும், சத்சங்களும் குறிக்கோளை வரையறுத்து, குரு அருள் மூலம் அருட்பெருஞ்ஜோதியின் திருவருளைப் பெற்று மகிழ நல்லுபதேசமாகும் அன்னை ஒரு குருவாகவே விளங்குகிறார்.

வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினை சேர்ந்த அடியார்கள் அருளிச்செய்த யோகக் கலைகளான பக்தியோகம், கர்மயோகம், கிரியாயோகம், ஞானயோகத்தின் வழிநின்று யோகக்கலையின் சூட்சுமத்தை இறைவனே ஒளிவடிவமாக உணர்த்த உணர்ந்தவர் அன்னை. இந்த யோகக்கலையின் நிறையனுபவமாக விளங்கும் ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல் என்பதற்கிணங்க எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி, ஜீவகாருண்யப் பணியை செம்மையுடன் செய்து வருகிறார் அன்னை.

வள்ளல் பெருமானாரின் வழிநின்று ஒளிநிலை வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தி வருகிறார் அன்னை.

--- சிவாய நம