ரசமணி பற்றி அன்னையின் விளக்கம்
ரசமணி
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
வள்ளலார்
யோகத்தில் சிறந்து விளங்க, ஞானத்தில் முழுமை பெற, உலகியல் போகங்கள் அனைத்தையும் அனுபவிக்க, செல்வச் செழிப்பு ஓங்க, மனமும் உடலும் ஆரோக்கியம் பெற,நேர்மறை எண்ணங்கள் வலுப்பெற, ஞானத்தின் உச்சத்தை தொட, தொழில் மேன்மையுற, பொருளாதாரம் சிறப்படைய, கல்வி, கேள்வி, ஞானம் இவற்றில் சிறந்து விளங்க மற்றும் நமது காரியங்களில் நாம் முன்னேறுவதற்கான சிறந்த மணி இம்மணி.
இம் மணி வாங்க விரும்புவர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி, முறை 1) திருவாசகத்தில் முதல் நான்கு நெடும் பாடல்களை படித்து வரவும். மேலும் தினமும் படித்து வருவதாக உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும். அல்லது முறை 2) "ஓம் சிவயவசி ஓம்" / "ஓம் வம் ஓம் வம் ப்ரீஜீ பதஞ்சலி வ்யாக்ரபாதாய வசியசிவ ஓம்" ஏதேனும் ஒரு மந்திரத்தை தினமும் காலை & மாலை குறைந்தபட்சம் 108 முறையாவது ஜெபித்து வர உறுதிமொழி எடுத்து, தொடர் பயிற்சியில் ஈடுபடவும். மேலும் இம் மணி பற்றி அறிய விரும்புவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண் 6384501154, 9363242883, 8870892188 அல்லது 9650068052. காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணிக்குள். அன்னையின் நேரடிப் பார்வையில் தயாராகிவருகிறது. முன்பதிவு அவசியம். தயவு செய்து 40 முதல் 50 நாட்கள் பயிற்சி செய்து வரவும், அதன்பின் முன்பதிவு அட்டவணைப்படி அன்பர்கள் மணியை வாங்கிக் கொள்ளலாம்.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
(1292)
இறையருள் அனுபவத்தைச் சத்தாய், சித்தாய், இன்பாய், அமுதாய் அனுபவித்த அடிகள், அதனை மணியாகவும் போற்றுகின்றார். இவ்வனுபவம் அண்டங்களையும், அதன்மேல் உள்ள அண்ட அடுக்குகளையும், அவற்றில் அமைந்துள்ள பொருள் வகைகளையும் காட்டியது என்பதனை ‘அண்டமும், அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே’ என்றார் அடிகள்.
பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
(1294)
அண்டத்தில் உள்ளதைக் காட்டியது பரம்பரமணி. பிண்டத்தில் உள்ள நுட்பங்களை காட்டுவது பராபரமணியாகும்.
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”
(திருமந்திரம்)
உடம்பினுள் உள்ள ஒப்பற்ற பொருளைக் காட்டித் தருவது பராபரமணியாகும். உடம்பினைக் கொண்டே சிற்சபை அனுபவத்தினையும் பொற்சபை அனுபவத்தினையும் பெறமுடியும். அதனையும் அருட்பெருஞ்ஜோதியரே காட்டித்தரவேண்டும் என்பதனை ‘பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பராபரமணியே’ என்றார் அடிகள்.
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
(1296)
உலகுயிர்கள் இருளாமையுறல் வேண்டும் என்று விரும்பினார் அடிகள். அத்துடன் தனை அடைந்தார் சுகம் வாய்க்கவேண்டும் என்றும் நினைத்தார். அவர் நினைத்த வண்ணம் இறைவன் அருளியதனை ‘நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறல் மணியே’ என்றார் அடிகள். பெறற்கரிய பெரும் மணி இறைவன்.
“எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம்
எல்லாம் செய்வல்ல சித்தே எனக்களித்த தெய்வம்
நண்ணிய பொன்னம்பலத்தே நடம்புரியும் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணிய என்பூசையிலே பலித்த பெரும்தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன் என்றுஎனை உலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்”
(3908)
விண்பதம் அனைத்தும் மேற்பதம் முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
(1298)
வெளிநிலைகளையும், அவற்றின்மேல் விளங்கும் பதநிலைகளையும் கண் அசைவினால் நடத்தி முடிப்பவர் ககனாமாமணியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதியர் என்பதனை ‘விண்பதம் அனைத்தும் மேற்பதம் முழுவதும் கண்பெற நடத்தும் ககனமா மணியே’ என்றார் அடிகள்.
பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே
(1300)
கீழ்உலகம், மேல்உலகம், பாதாள உலகம் என மூவகை உலகங்கள் அனைத்திலும் அரசாட்சி செய்பவர் அருட்பெருஞ்ஜோதியர் என்பதனைப் ‘பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும் சார்புற நடத்தும் சரஒளி மணியே’ என்றார் அடிகள். பாதாள உலகினை பகர்அடி முழுவதும் என்றார் அடிகள்.
அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே
(1302)
கண்மூடிக் கண் திறப்பதனை கணப்பொழுது என்பர். அண்டங்கள் முழுவதையும் கண்டு, சுற்றி வருவதற்கு (ஏகி) அரைக்கணமே போதுமானது. அதைக் கலைநிறை மணியாக இருந்து அருட்பெருஞ்ஜோதியர் நடத்துவார் என்றார் அடிகள்.
சரஅசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
(1304)
அசையும் உயிர், அசையா உயிர் (தாவரம்), இடம்விட்டு இடம் பெயரும் உயிர், இடம்விட்டு இடம் பெயராத பொருள் என அனைத்திலும் பரவி (விராவி) அவ்வவற்றின் உள்நின்று இயக்குபவர் வித்தகமணியான அருட்பெருஞ்ஜோதியர் என்றார் அடிகள்.
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
(1306)
பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவர்களும், உலகியல் பற்றுக்களையும், அறுபகைக் குற்றங்களையும் நீத்த முனிவர்களும், முத்தேக சித்திக்கும் மரணமிலாப் பெருவாழ்விற்கும் முந்தைய நிலையான முத்திநிலை பெற்ற முத்தர்களும், தேகசித்தி, ஏமசித்தி மட்டுமல்லாது, என்றும் இருப்பதான நிலை அனுபவம் பெற்றவர்களும் (சித்தரும்) தேவர்களும் மதித்துப் போற்றுவது சித்திசெய் மணியான அருட்பெருஞ்ஜோதியரே ஆகும்.
தாழ்வெலாம் தவிர்த்து சகமிசை அழியா
வாழ்வெனக்கு அளித்த வளர்ஒளி மணியே
(1308)
என்றும் இருப்பதான ஒளி உடம்பை அருளிச் செய்த இறைவனை ‘அழியா வாழ்வு எனக்கு அளித்த வளர்ஒளி மணியே’ என்றார் அடிகள். அடையவேண்டிய உயர் இலக்கினை அடைந்ததால் இவ்வுலகில் (சகமிசை) தாழ்வு என்பதே இல்லாத நிலை கிடைத்தது என்பதனைத் ‘தாழ்வெலாம் தவிர்த்து’ என்றார் அடிகள்.
நவமணி முதலிய நலம்எலாம் தரும்ஒரு
சிவமணி எனும் அருள் செல்வமா மணியே
(1310)
பரம்பரமணி, பராபரமணி, அரும்பெறல்மணி, ககனமாமணி, சரஒளிமணி, கலைநிறை மணி, வித்தகமணி, சித்திசெய் மணி, வளர்ஒளிமணி என ஒன்பது வகை மணிகள் பற்றி விளக்கிய அடிகள் ஒவ்வொருவகை மணியும் ஒவ்வொரு பயன்பாட்டினைத் தரும் என்றும் விளக்கினார். அகத்திலும் புறத்திலும் அமர்ந்து அழியா வாழ்வைத் தந்த வளர்ஒளி மணியாகிய அப்பரம்பொருளே இவ்வொன்பது வகை மணிகளையும் அவற்றின் நலம் அனைத்தையும் தந்த சிவமணி எனப் போற்றினார் அடிகள். சிவமணியைப் பெறுதலே அருள்நிலையும் செல்வ நிலையுமாம் என்பதனை அருட்செல்வமாமணி என்றார் அடிகள்.
திருச்சிற்றம்பலம்.