உடம்பின் பயன்
2 - உடம்பின் பயன்
,
3) ஒரு பயனாவது உடம்பின் பயனே
தரு பயனாம் சங்கரனைச் சார் 13
உடம்பு எடுத்ததன் பயன் உடம்பிற்குள் உத்தமனைக் காண்பதற்கே என்பதனை‘உடம்பின் பயனே’ என்றார். இகத்திலேயே பரத்தைப் பெற்று வாழ இவ்வுடம்பு தரும் பயனாகிய
அருள்ஒளியை, மங்கலத்தை, துக்க நிவாரணத்தை உணரவேண்டும். பிறவியிலிருந்து விடுதலைபெறுவதற்கும், சங்கரனைச் சார்வதற்கும் உடலே துணை நிற்கும்.
4) பிறப்பினால் பெற்றபயன் ஆவதெல்லாம்
துறப்பதாம் தூநெறிக்கண் சென்று 14
அறத்தால் வருவது இன்பம். இவ்வுடம்பு பெற்ற பயன் உணர்வு பெறுதல்.தூநெறியாவது ஒளிநெறி. பிரஸாதயோகம் என்னும் ஒளியறிவைப் பெற்றுக்கொண்டு,புலனிச்சை,பொறி இச்சைகளிலிருந்து விடுதலை பெறுவதே துறப்பதாகும். ‘துணையாயிருந்து என்நெஞ்சம் துறப்பிப்பாய்’
என்பது அப்பர் வாக்கு. துறவு, நெஞ்சத்துறவாக இருக்கவேண்டும் அது ஒளிநெறிமேற்கொண்டு பழகும் உணர்வுடையாருக்கே சாத்தியம் என்பதால் ‘துறப்பதாம் தூநெறிக்கண் சென்று’ என்றார் பிராட்டியார்.