இன்றைய சிந்தனையில் யோகம் என்றால் என்ன? அதனால் ஒரு உயிர் அடையும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். யோகம் என்பது ஒன்றுதல் என்று பொருள். எதனோடு ஒன்றுதல்?. நம்முள் இருக்கும் இறைவனோடு ஒன்றுதலே யோகமாகும். இந்திரியங்களை நெறிப்படுத்தி புலன்களும் பொறிகளும் நிரந்தரமான இன்பத்தை நுகர்வதற்கான கருணையை செய்வதே யோகத்தின் பயனாகும். திருவாசகம் இதனை ஒழிவற நிறைந்த யோகம் என்கிறது.

செல்வகணபதி அறக்கட்டளை

திருவருள் கருணை கூட்டுவிக்க செல்வகணபதி அறக்கட்டளை என்னும் பெயரால் ஒரு அறக்கட்டளை 1999 ஆம் ஆண்டு தவத்திரு அன்னை சகுந்தலா அவர்களால் நிறுவப்பட்டது.

இது சமுதாய ஆன்மிக பணிகளை முன் நிறுத்தி செயல்பட்டு வருகிறது. நோயுற்றவர்களுக்கு மருத்துவசதி, உழவாரப்பணி, அன்னம்பாளிப்பு, யோக பயிற்சி, சத்சங்கம் இவைகளை பிரததானமாக கொண்டு செயல்படுகிறது. இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் மருத்துவ சேவை, நலிந்தவர்களுக்கு உதவுதல் இவைகள் செல்வ கணபதி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நலத் திட்டங்களாகும். ஆக்கபூர்வமான சமுதாயச் சிந்தனையுடன் புத்தங்களையும் வெளியிட்டு வருகின்றது. வருங்காலத்தில் இப்பணி கல்வி மற்றும் பல துறைகளில் செயல்பட உள்ளது.